டெல்லி: 'தலைவி' படத்தின் ஷுட்டிங் தொடங்கியுள்ளதாக கிளப் போர்டுடன் படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
ஏ.எல். விஜய் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் முன்னணி கதாநாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார்.
இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான சாயிலேஷ் ஆர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படத்தின் கிளாப் போர்டை பதிவிட்டு, 'தலைவியின் அழகான பயணத்தைத் தொடங்கியுள்ளோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால் அவரது நடை, உடை, பாவனை, ஆளுமைத்திறன் போன்றவற்றை அவரது படங்கள், அரசியல் நிகழ்ச்சிகள் போன்றவற்றை பார்த்து ஒரு மாதத்துக்கும் மேலாக பயிற்சி மேற்கொண்டுவந்தார் கங்கனா. அத்துடன் பரதநாட்டியமும் முறையாக கற்றுக்கொண்டார்.