பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகை ஷில்பா ஷெட்டி. பாலிவுட் டாப் ஸ்டார்களான ஷாருக்கான் முதல் பலருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். தமிழில் பிரபு தேவா உடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்திருந்தார். திரையுலக பிரபலங்கள் தங்கள் குழந்தையை பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கமான ஒன்று. ஆனால் ஷில்பா ஷெட்டி தன் மகன் வியானின் பிறந்தநாளுக்கு உருக்கமான வரிகளை எழுதி இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உனக்கு உயிர்கொடுக்கும் வரை அதிசயங்கள் மீது நம்பிக்கையில்லை; மகனுக்கு ஷில்பா சொன்ன வாழ்த்து - பிறந்தநாள் வாழ்த்து
பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி தன் மகனுக்கு வாழ்த்து தெரிவித்து உருக்கமாக எழுதியிருக்கிறார்.
மகனின் பிறந்தநாள் குறித்து அவர், உனக்கு உயிர்கொடுக்கும் வரை அதிசயங்கள் மீது நம்பிக்கையில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் என் மகனே, ஏழு ஆண்டுகள் வேகமாக ஓடிவிட்டன. அளவுகடந்த அன்பு என்கிற உணர்வு இருப்பதை உன் மூலமாக உணர்ந்தேன். என்னை தேர்ந்தெடுத்து, தினமும் புதிதாய் ஏதாவது கற்றுத்தருவதற்கு நன்றி. நீதான் எங்கள் உலகம் என குறிப்பிட்டுள்ளார்.
ஷில்பா ஷெட்டியின் இந்தப் பதிவை பார்த்து, பாடகி ஸ்ரேயா கோஷல், தியா மிர்சா, சமீரா ரெட்டி, பிபாசா பாசு உள்ளிட்ட பிரபலங்கள் வியானுக்கு வாழ்த்துகளை பதிவு செய்திருக்கின்றனர்.