தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனா நெருக்கடிக்கு ஷில்பா ஷெட்டி ரூ. 21 லட்சம் நிதியுதவி - கரோனா

நடிகை ஷில்பா ஷெட்டி கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க உதவி தொகையாக 21 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

sas
sa

By

Published : Mar 30, 2020, 11:09 AM IST

கரோனா தொற்றால் இந்தியா முழவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நடிகர், நடிகைகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் சமாளிப்பதற்காக, பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்காக 21 லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”நான் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்காக 21 லட்சம் ரூபாய் வழங்குகிறேன். கடலில் ஒவ்வொரு துளியும் கணக்கிடப்படுகிறது, எனவே இந்தச் சூழ்நிலையை எதிர்த்துப் போராட உதவுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:திடீரென்று தனது ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றிய ஜீவா - ஏன் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details