'துள்ளுவதோ இளமை' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஷெரின். இதையடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிப் படங்களில் நடித்துள்ளார். பிறகு திரைத் துறையை விட்டு சற்று விலகியிருந்த ஷெரின், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் படங்களில் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்றார். இதற்கிடையில் அந்நிகழ்ச்சியில் தனது சகப் போட்டியாளரான தர்ஷனை இவர் காதலிப்பதாகக் கிசுகிசுக்கப்பட்டது.
இதையடுத்து தர்ஷன் தனக்கு காதலி இருக்கிறார் என்று சொன்னதையடுத்து பிரச்னை சரியானது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இவ்விகாரம் தொடர்பாக தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதற்கு ஷெரின் தான் காரணம் என்று சமூக வலைதளங்கில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக நீண்ட நாள்களாக எந்தப் பதிலும் அளிக்காத நிலையில், ஷெரின் தற்போது சனம் ஷெட்டியை மறைமுகமாகத் தாக்கிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''என்னை யாராவது தாக்க வேண்டும் என்றால் தாராளமாகச் செய்யலாம், அதற்கு நான் கையெழுத்து போட்டுத் தருகிறேன். என்னை மோசமான பெயர்களால் அழைப்பதை நான் சிரிப்புடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதில் என் குடும்பத்தை விட்டுவிடுங்கள்.