2010ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுத்து படத்தை முடித்திருந்தார் செல்வராகவன்.
இதன் இரண்டாம் பாகம் எப்போது என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இரண்டாம் பாகம் தொடங்கவிருக்கிறது என்ற அறிவிப்பு வெளியானது. மேலும், இதில் தனுஷ் நடிக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், ‘நானே வருவேன்’ என்ற படத்தில் தனுஷ் - செல்வா கூட்டணி அமைத்தனர்.
இது ஒருபுறமிக்க, பீஸ்ட், சாணிக் காயிதம் ஆகிய படங்களில் நடிக்க செல்வா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் தனியார் ஊடகம் ஒன்று ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ குறித்து தவறான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. ஆயிரத்தில் ஒருவன் 2 பெரிய பட்ஜெட்டில் உருவாகுவதாகவும், அதன் தயாரிப்பாளர் ப்ரீ-புடரொடக்ஷன் பணிகளிலேயே சில கோடி ரூபாய்களை செலவு செய்துவிட்டதாகவும் அதில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த செய்தியை பகிர்ந்த செல்வா, எப்போது ப்ரீ-புரொடக்ஷன் பணி தொடங்கியது? அந்தத் தயாரிப்பாளர் யார்? தயவு செய்து உங்கள் தகவல்களை சரிபார்த்து வெளியிடுங்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவை தனுஷ் ரீட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: இணையும் விஜய் -தனுஷ் கூட்டணி... உற்சாகத்தில் ரசிகர்கள்!