தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் கூட்டணி அமைக்கும் செல்வராகவன், தனுஷ்! - danush

என்ஜிகே படத்திற்கு பிறகு இயக்குநர் செல்வராவன் தம்பி தனுஷை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன், தனுஷ்

By

Published : Jul 3, 2019, 12:04 AM IST

இயக்குநர் செல்வராகன் இயக்கத்தில் கடைசியாக வந்த படம் என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்திருந்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அரசியலை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படம்குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும் செல்வராகவன் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் மீண்டும் தம்பி தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்வராகவன், தனுஷ் ஆகிய இருவரும் சகோதரர்ரகளாக இருந்தாலும் சினிமா என்று வரும்போது நடிகன், இயக்குநர் என தனி அடையாளத்தை பிடித்து தனக்கான மரியாதையை பெற்றுள்ளனர். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கிறது. இன்றுவரை அதற்கான தனிமதிப்பும் இருக்கிறது.

இந்த மூன்று படங்களும் தமிழ் சினிமாவில் புது மைல்கல்லை தொட்ட படங்கள் என்றே கூறலாம். இந்நிலையில், செல்வராகவன் தனுஷை வைத்து இயக்க இருக்கும் இப்படம் புதுப்பேட்டை 2 என்று பேச்சு அடிபடுகிறது. முன்னதாக புதுப்பேட்டை -2 இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், இது புதுவிதமான கதைக்களத்தை வைத்து எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. செல்வராகவன் தொட்ட கதையை திரும்ப தொடும் பழக்கம் கொண்டவரில்லை ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சியை மேற்கொள்பவர் அதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும், இப்படத்தை தனுஷே தயாரிக்க இருக்கிறாராம். தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details