தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கோபமா இருந்தா பேசி தீத்துக்கோங்க; இல்லைனா உறவே முறிஞ்சிரும்' - செல்வராகவன் - Kollywood news

ஒருவர் மீது கோபமோ, வருத்தமோ இருந்தால் சட்டென்று பேசி தெளிவு செய்து கொள்ளுங்கள்; இல்லையென்றால் உறவே முறிந்துபோகும் என்று இயக்குநர் செல்வராகவன் அறிவுரை கூறியுள்ளார்.

செல்வராகவன்
செல்வராகவன்

By

Published : Aug 8, 2020, 8:08 PM IST

'காதல் கொண்டேன்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் செல்வராகவன். இதையடுத்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், மயக்கம் என்ன, என்ஜிகே ஆகிய படங்களை இயக்கினார்.

பொதுவாக அமைதியாக இருக்கும் இயக்குநர் செல்வராகவன், ஊரடங்கில் தனது சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கிறார். இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் சிறந்த உறவை எப்படி கையாள்வது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "உங்களுக்கு ஒருவர் மேல் வருத்தமோ, கோபமாக இருந்தால் சட்டென்று பேசி தெளிவு செய்து கொள்ளுங்கள். மனதிலேயே வைத்து, வளர்த்து இப்படித் தான் இருக்கும் என கற்பனை மேல் கற்பனை செய்துகொண்டு போனால் அது மிகப்பெரும் வெறுப்பாகி உறவே முறிந்துபோகும்" என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details