தமிழில் ‘கூடல் நகர்’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர்ப்பறவை’, ’தர்மதுரை’, ’கண்ணே கலைமானே’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் சீனு ராமசாமி. பசுமை மாறாத கிராமத்து காவியங்களை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற கோணத்தில் சித்தரிக்கும் கைவண்ணம் கொண்டவர் என்று ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர்.
இவருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், மனைவி, மகள்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், சீனு ராமசாமியின் பேஸ்புக் பக்கத்தில் ‘Got Married' என்ற போஸ்ட் வெளியிடப்பட்டது. இதைக்கண்ட ரசிகர்கள் இவருக்குதான் ஏற்கெனவே திருமணமாகிவிட்டதே என்று குழம்பினர்.