அட்லி இயக்கும் ‘பிகில்’ படத்தில் நடித்துவரும் விஜய், அடுத்ததாக ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 3ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் விஜயுடன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மாளவிகா மோகனன், கியாரா அத்வானி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அக்டோபர் 3ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
நேற்று இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதை படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் இணைந்துள்ளார். இவர் மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' படத்தில் நடித்தவர்.
இந்தப் படம் குறித்து 3 நாட்களுக்கு தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகும் என அறிவித்திருந்த தயாரிப்பு நிறுவனம், முதல் அப்டேட்டாக விஜய் சேதுபதி இதில் நடிப்பதை உறுதி செய்தது. தற்போது ஆண்டனி வர்கீஸ் நடிப்பதை உறுதி செய்துள்ளது. மூன்றாவது அப்டேட் என்னவா இருக்கும் என்ற எதிர்பார்புடன் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: இது முதல் அப்டேட் - ‘தளபதி 64’ களத்தில் விஜய் சேதுபதி!