உலகெங்கும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் படம் மார்வெலின் அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம். இதில் ஸ்கார்லெட் ஜான்சன், ராபர்ட் டவ்னி, கிரிஸ் ஹெம்ஸ்வர்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
மார்வெல் புகழ் ஸ்கார்லெட் ஜான்சன், புகைப்படகலைஞர் மீது புகார் - நடிகை ஸ்கார்லெட் ஜான்சன்
வாஷிங்டன்: மார்வெல் புகழ் நடிகை ஸ்கார்லெட் ஜான்சனை புகைப்படம் எடுக்க புகைப்படகாரர் காரில் அதிவேகமாக துரத்திச் சென்றார். இதனால் பதற்றமடைந்த ஸ்கார்லெட் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக புகழ்பெற்ற ஜிம்மி கிம்மல் லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஸ்கார்லெட். இதற்குப் பிறகு தன் காரில் திரும்பிக் கொண்டிருந்த போது புகைப்படக்காரர் ஒருவர் அபாயகரமான விதத்தில் ஸ்கார்லெட்டை புகைப்படம் எடுக்க துரத்தியதாகக் கூறப்படுகிறது.
பயந்துபோன ஸ்கார்லெட் ஜான்சன் ஹாலிவுட் காவல் நிலையத்திறக்கு சென்று புகார் செய்துள்ளார். அவெஞ்சர்: எண்ட கேம் வரும் 26ஆம் உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.