நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் கரோனா காரணமாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று ஆஸ்கர் ரேஸிலும் இணைந்துள்ளது.
இதனை அடுத்து சூர்யா - இயக்குநர்கள் பாண்டிராஜ், வெற்றிமாறன், ஹரி ஆகியோரின் படங்களில் நடிக்க இருக்கிறார். முதலில் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க நேற்று ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று (ஜனவரி 29) சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டி. இமான் இசையமைக்கிறார்.
கிராமத்துப் பின்னணியில் உருவாக உள்ளதாகவும், பிப்ரவரி மாதம் 15ஆம் தேதிமுதல் புதுக்கோட்டை, காரைக்குடி பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.