'தேவ்' படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் 'கைதி'. 'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார். ட்ரீம் வாரியஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிரைம் திரில்லர் கதையை மையமாக கொண்டு உருவாகும் 'கைதி' படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். செய்யாத தவறுக்காக சிறைக்குள் செல்லும் கார்த்தி, அங்கு படும் சக கைதிகளால் பல கஷ்டங்களை அனுபவிக்கிறார். நான்கு மணி நேரத்தில் நடக்கும் சம்பவம்தான் படத்தின் மொத்தக் கதை எனக் கூறப்படுகிறது. இதில், மத்திய சிறைக்குள் இருந்து கார்த்தி எப்படி தப்பித்து செல்கிறார் என்பதை சொல்லும் படம்தான் 'கைதி'.
சசிகுமாருக்கு 'குட் பை' சொன்ன நிகிலா! - ootty
'பாபநாசம்' இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் கார்த்தி, படக்குழுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தற்போது, கைதி படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், மலையாள இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். கார்த்தி நடிக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஊட்டியில் தொடங்கியது. தற்போது, ஊட்டியில் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கார்த்தி பதிவிட்டுள்ளார். படத்தில் சசிகுமாருடன் கிடாரி, வெற்றிவேல் ஆகிய படங்களில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மலையாள நடிகை நிகிலா விமல் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. கனமான வேடங்களில் நடித்து வரும் சத்யராஜ், இப்படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நடிக்கிறார். 90எம்.எல் படத்தில் வில்லனாக நடித்த ஆன்ட்சன் பால், இப்படத்தில் வில்லனாக நடிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கு 96 படத்தின் மூலம் பிரபலமடைந்த கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.