'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா' படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகவுள்ள படம் 'எம்.ஜி.ஆர் மகன்'. சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, மிருணாளினி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் மூலம் பிரபல பின்னணிப் பாடகர் அந்தோணிதாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
சசிகுமாரின் 'எம்ஜிஆர் மகன்' செய்தியாளர் சந்திப்பு! - சசிகுமாரின் எம்ஜி ஆர் மகன்
சென்னை: சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ’எம்ஜிஆர் மகன்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
mgr
'எம்.ஜி.ஆர் மகன்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் சசிகுமார், இயக்குநர் பொன் ராம், நடிகை மிருணாளினி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.