ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் 'தர்பார்'. இதில் பிரதிக் பாப்பர், சுனில் ஷெட்டி, தம்பி ராமையா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
'தர்பார்' ட்ரெய்லர் தேதியை அறிவித்த சந்தோஷ் சிவன்! - ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'தர்பார்' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்த தகவலை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
darbar
2020 பொங்கல் பண்டிகையையொட்டி இத்திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரமண்டமாக நடைபெற்றது. இதனிடையே இப்படத்தின் ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன், நாளை (டிசம்பர் 12) ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.