சென்னை: சந்தானம் படத்தின் ரிலீஸ் பிரச்னை தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் சுமூகமாக தீர்க்கப்பட்டது.
சந்தானம் நடிப்பில் 'டகால்டி' மற்றும் 'சர்வர் சுந்தரம்' ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் (ஜனவரி 31) வெளியாகவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என திரையரங்கு வட்டாரம் தெரிவித்ததையொட்டி, இரு தயாரிப்பாளர்கள் இடையேயும் தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
'டகால்டி' மற்றும் 'சர்வர் சுந்தரம்' ஆகிய இரு படங்களின் தயாரிப்பாளர்களும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதி ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஃபெப்சி சிவா, தயாரிப்பாளர் ராஜன் “சர்வர் சுந்தரம்” படத்தயாரிப்பாளர் செல்வகுமார் மற்றும் “டகால்டி” படத்தயாரிப்பாளர் சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்
இதையடுத்து 'சர்வர் சுந்தரம்' படத்தயாரிப்பாளர் செல்வகுமார் பேசியதாவது:
இரண்டு வருடங்களுக்கு மேலாக போராடி இப்போது இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முற்பட்டோம். சந்தானத்தின் மற்றொரு படமான 'டகால்டி' படமும் அதே நாளில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் பிரச்னையில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இருவருக்கும் நலம் பயக்கும் வகையில் எங்கள் படத்தை பிப்ரவரி 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டோம். இது சினிமாவுக்கு நல்லது மட்டுமில்லாமல், எங்கள் இருவருக்கும் நல்லது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
Server sundaram movie producer selvakumar படம் வெளியிடுவது சாதாரண வேலையில்லை. எங்கள் படத்தை கண்டிப்பாக பிப்ரவரி 14ஆம் தேதி திரைக்கு கொண்டு வருவோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி என்றார்.
'டகால்டி' படத்தயாரிப்பாளர் சௌத்ரி பேசியதாவது:
இங்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. எனக்கு இப்படம் தலைப்பிரசவம் போன்றது. எல்லோருக்கும் முதல் படம் என்பது ஒரு குழந்தை பிறப்பது போன்றதுதான். சர்வர் சுந்தரம் தயாரிப்பாளர் எங்களுக்காக விட்டுக்கொடுத்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி. இதற்கு ஒத்துழைத்த தயாரிப்பாளர் சங்கத்துக்கும் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி என்றார்.
Dagaalty movie producer Chaudhary