தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த சஞ்சய் தத்! - புற்றுநோயிலிருந்து மீண்ட சஞ்சய்

நடிகர் சஞ்சய் தத், தான் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத்
சஞ்சய் தத்

By

Published : Oct 22, 2020, 9:08 AM IST

பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத்திற்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத் தான் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் குடும்பத்தினருக்கு கடந்த சில வாரங்கள் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், கடினமான போர்களை வலிமையான வீரர்களுக்குத் தான் கடவுள் கொடுப்பார். என் குழந்தையின் பிறந்த நாளான நேற்று (அக்.21) புற்றுநோய் போராட்டத்தில் இருந்து நான் வெற்றிகரமாக வந்திருக்கிறேன். இதனால் எனது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

உங்களது ஆதரவு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை இல்லாமல் இதிலிருந்து என்னால் மீண்டு இருக்கமுடியாது. என்னுடைய கடினமான சூழலில் துணையாக நின்ற எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் அத்தனை ரசிகர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் கடமையாக இருப்பேன். மருத்துவர் செவந்தி, மற்றும் அவரது குழு, செவிலியர், ஊழியர்கள் ஆகியோருக்கு என் நன்றி. என்னை அவ்வளவு சிறப்பாக பார்த்துக் கொண்டனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'சிலம்பரசன் இஸ் பேக்' - உற்சாகத்தில் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details