கன்னடத் திரையுலகில் போதைப்பொருள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் (சிசிபி - Central Crime Branch (CCB)) விசாரணை மேற்கொண்டனர்.
நடிகை ராகினி திவேதி முன்பிணை விசாரணை ஒத்திவைப்பு - கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள்
பெங்களூரு: கன்னட நடிகை ராகினி திவேதியின் முன்பிணை விசாரணை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதில் கன்னடத் திரைப்பட உலகில் போதைப்பொருள்களை விநியோகம் செய்ததாக நடிகை ராகினி திவேதியை மத்திய குற்றப்பிரிவினர் செப்டம்பர் 4ஆம் தேதி கைது செய்தனர்.
ராகினியை மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் எட்டு நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ராகினி முன்பிணை வேண்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது இன்று (செப்டம்பர் 11) விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் ராகினியிடம் முழுமையான விசாரணையை முடிக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
இதனையடுத்து நீதிமன்றம் முன்பிணை குறித்தான மனுவை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதற்கிடையில், ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரும் போதை மருந்து பரிசோதனைக்காக தங்களது ரத்தம், முடி மாதிரிகளை அளித்துள்ளனர்.