தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இசையும் நடனமும் என்னை இளைப்பாறவைக்கிறது - 'ஃப்ரீஸ்டைலில்' நடனமாடும் சம்யுக்தா ஹெக்டே - சம்யுக்தா ஹெக்டேவின் ஃப்ரீஸ்டைல் வீடியோ

"இசையும் நடனமும் தான் என்னை இளைப்பாறவைக்கின்றன. நடனத்தால் நான் ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கின்றேன். ஆரோக்கியமாக இருக்கிறேன்"

samyuktha hegde
samyuktha hegde

By

Published : Mar 28, 2020, 12:15 AM IST

தேசிய ஊரடங்கு உத்தராவல் வீட்டில் இருக்கும் சம்யுக்தா ஹெக்டே வீட்டில் டூபீஸில் நடனமாடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில், அவருக்குப் பள்ளிப்பருவ காதலியாக நடித்திருந்தவர் சம்யுக்தா ஹெக்டே. உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் உடைய இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பல்வேறு வகையான உடற்பயிற்சிகளையும் உடற்பயிற்சி அறிவுரைகளையும் பகிர்ந்துவருகிறார்.

இதற்கிடையே மாடலிங் போட்டோ ஷூட், ஆண் நண்பருடன் பீச் பிகினி ஷூட் என ரசிகர்களைக் கிறங்கடித்தும் வருவார். தற்போது தேசிய ஊரடங்கு உத்தரவால் மன அழுத்தத்தில் இருந்து எப்படி விடுபடுகிறேன் என்பதை தினமும் ஒரு வீடியோவை பதிவேற்றி வருகிறார்.

தேசிய ஊரடங்கின் முதல் நாள், ஜீன்ஸ், சர்ட்டுடன் நடனமாடிய சம்யுக்தா எனது நடனவீடியோவை மொபைலிலும் டிக்டாக்கிலும் நான் வைத்துக்கொள்ளவில்லை. எனக்கு தெரியவில்லை நான் ஏன் அவ்வாறு செய்தேன் என்று பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து இரண்டாவது நாளில் வீட்டிற்குள் எவ்வித மேக்கபும் இல்லாமல் டூபீஸ் உடையில் செம்ம ஆட்டம் போடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இசையும் நாடனமும் தான் என்னை இளைப்பாறவைக்கின்றன. நடனத்தால் நான் ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கின்றேன். ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னை பின் தொடர்பவர்கள், நண்பர்கள் அனைவரும் நடனமாடும் வீடியோவை பதிவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டதால் இதை பதிவிடுக்கிறேன். இது எனக்கு மிகவும் பிடித்த பாடலுக்கு ஒரு ஃப்ரீஸ்டைல் நடனம் என்று பதிவிட்டுள்ளார்.

சம்யுக்தாவின் இந்த நடனவீடியோ பதிவிட்ட சிலமணி நேரத்திலேயே சமூகவலைதளத்தையும் ரசிகர்களையும் கிறங்கடித்தது. அதுமட்டுமல்லாது வீடியோ தற்போது வைரலாகியும் வருகிறது. முதல் நாள் புல் டிரஸ் நடனம். இரண்டாம் நாள் டூபீஸ் நடனம். இனிவரும் நாட்களின் இவரது வீடியோ, புகைப்படங்கள் எப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்பில் இருந்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details