பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரைட்டர்’. இத்திரைப்படத்தை புகழ்பெற்ற இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிக்கிறார். ரைட்டர் படத்தின் படப்பிடிப்புப் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின. '96' படப் புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. போஸ்டரில் சமுத்திரக்கனி வயதான காவல் துறை அலுவலரைப் போல் காணப்படுகிறார்.
போஸ்டரே படத்தலைப்பை வெகு எளிமையாக உணரச் செய்கிறது. இத்திரைப்படம் எளிய மனிதர்களின் துயர் குறித்து விவரிக்கும் எனப் படத் தயாரிப்பாளர் பா. இரஞ்சித் தெரிவித்திருந்தார்.
'ரைட்டர்' திரைப்படமானது வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் சிங்கிள் நாளை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதையும் படிங்க: பிரபுதேவாவின் 'மை டியர் பூதம்' மோஷன் போஸ்டர் வெளியீடு