தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ரைட்டர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு; ரசிகர்கள் குதூகலம்! - கோலிவுட் சினிமா அண்மைச் செய்திகள்

பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘ரைட்டர்’ திரைப்படம் வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

ரைட்டர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு
ரைட்டர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு

By

Published : Dec 2, 2021, 10:16 PM IST

பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரைட்டர்’. இத்திரைப்படத்தை புகழ்பெற்ற இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கிறார். ரைட்டர் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

'96' படப் புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. போஸ்டரில் சமுத்திரக்கனி வயதான காவல்துறை அலுவலரை போல் காணப்படுகிறார்.

ரைட்டர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு

போஸ்டரே படத்தலைப்பை வெகு எளிமையாக உணரச் செய்கிறது. இத்திரைப்படம் எளிய மனிதர்களின் துயர் குறித்து விவரிக்கும் என படத்தயாரிப்பாளர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 'ரைட்டர்' திரைப்படமானது வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளதால் ரிலீஸ் தேதி தகவல் ரசிகர்களை குதூகலமடையச் செய்துள்ளது.

இதையும் படிங்க:'பேச்சிலர்' ஓடிடி உரிமையைக் கைப்பற்றியது யார்?

ABOUT THE AUTHOR

...view details