‘லாக்கப்’, ‘கபெ.ரணசிங்கம்’, 'மதில்’, ‘ஒருபக்க கதை’,‘மலேஷியா டு அம்னீஷியா’,'டிக்கிலோனா' உள்ளிட்ட படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது.
இந்த வரிசையில் ஜீ5 ஓடிடியில் அடுத்தாக “விநோதய சித்தம்” திரைப்படம் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ளார். இவருடன் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அபிராமி ராமநாதன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'விநோதய சித்தம்' திரைப்படம் குறித்து சமுத்திரக்கனி கூறுகையில், "மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை உணர்ந்து கொள்ளமுடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி’ என்றார்.
தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் கூறுகையில், தன்னால் மட்டுமே குடும்பத்தை கவனித்துக்கொள்ள முடியும், தான் இல்லையென்றால் குடும்பத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிடும் என்று நினைக்கும் ஒவ்வொரு நபருக்கும் தகுந்த பதிலை கூறும் படமே ‘விநோதய சித்தம்’ என்றார்.
இதையும் படிங்க: சமுத்திரக்கனி- யோகி பாபு காம்போவில் உருவாகும் 'யாவரும் வல்லவரே'!