நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா, நாக ஷவுரியா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள படம் ‘ஓ பேபி’. இதில் பழம்பெரும் நடிகை லக்ஷ்மி, ராஜேந்திர பிரசாத், ஊர்வசி பிரகதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். காதல் கலந்த குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஓ பேபி’, கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சுரேஷ் புரோடக்ஷன் தயாரித்துள்ள இந்த திரைப்படத்துக்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ளார்.
சமந்தாவின் ‘ஓ பேபி’ டீசர் வெளியானது! - ஓ பேபி
சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ பேபி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
samantha
கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் திரைப்படங்களில், ஒருசில நடிகைகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. அதில் சமந்தா சமீப காலமாக இடம்பிடித்திருக்கிறார். ‘யூ டர்ன்’ படத்துக்குப் பிறகு சமந்தாவுக்கு ‘ஓ பேபி’ அந்த வாய்ப்பை அளித்துள்ளதாக தெரிகிறது. டீசர் முழுக்க சமந்தாவே நிறைந்திருக்கிறார்.
Last Updated : May 25, 2019, 7:10 PM IST