திரை நட்சத்திரங்களான சமந்தா-நாக சைதன்யா இருவரும் கடந்த அக்.2ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக கணவன்-மனைவி உறவில் இருந்து பிரிந்தாக அறிவித்தனர்.
தற்போது சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ட்ரீம் & அலெக் பெஞ்சமின் எழுதிய சேஞ்ச் மை க்ளோட்ஸ் பாடலுடன் ஒரு புதிய பதிவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் "நான் உலகை மாற்ற விரும்பினால், நான் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும். நான் என் படுக்கையை உருவாக்க வேண்டும். அதில் மதியம் வரை படுக்காமல், நான் செய்ய விரும்பும் விஷயங்களைப் பற்றி கனவு காண்கிறேன், ம்ம்ம், ம்ம்ம்” என பதிவிட்டுள்ளார்.
இப்பதிவானது, இருவரும் பிரிவதாக அறிவித்த பிறகு நடிகை சமந்தா , தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட முதல் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சமந்தா - நாக சைதன்யா பிரிவு: விசயத்தை போட்டுடைத்த கங்கனா!