நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்தபிறகு தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்துவருபவர் சமந்தா. இவர் திருமணத்திற்குப் பிறகு, நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியைச் சேர்த்து சமந்தா அக்கினேனி எனப் பயன்படுத்தினார்.
இதனிடையே சமீபத்தில் சமந்தா தனது ட்விட்டர் பக்கத்திலிருந்த சமந்தா அக்கினேனி பெயரை நீக்கிவிட்டு வெறும் S என்று மாற்றினார். உடனே நெட்டிசன்கள் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் இருவரும் பிரிந்துவிடுவார்கள் எனவும் வதந்தி பரப்ப ஆரம்பித்தனர்.