தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம்வருபவர் சமந்தா. 2010இல் வெளியான மாஸ்கோவின் காவிரி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கிலும் 20க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்து தொடர்ந்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்துவருகிறார். அதுமட்டுமல்லாது 'தி பேமிலி மேன் 2' என்ற வெப் சீரிஸில் நடித்தும் வருகிறார். இவர் நடிப்பில் ஜானு திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இப்படி பிஸியாக இருந்து வரும் சமந்தா சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டும் வருகிறார். தற்போது சமந்தா தனது தோழிகளுடன் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் இகாம் என்னும் ப்ரீ ஸ்கூலை தொடங்கியுள்ளார். இந்த ஸ்கூலின் அட்மிஷனும் தற்போது நடைபெற்று வருகிறது.