திரைத்துறையின் நட்சத்திர ஜோடிகளான சமந்தா, நாக சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். மிகவும் கோலாகலமாக, கோவாவில் இரண்டு நாள்கள் இவர்களது திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் படங்களில் பிஸியாக நடித்துவருகின்றனர். இதனிடையே அக்டோபர் 2 ஆம் தேதி இவர்கள் தங்களது திருமண வாழ்க்கை முடித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இவர்களின் பிரிவைக் கண்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், "பல்வேறு கட்ட யோசனைகளுக்குப் பிறகு, நாங்கள் பிரிவதாக முடிவு எடுத்துள்ளோம். இனி நண்பர்களாக இருக்க போகிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.