தமிழ், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் பிஸியாக நடித்துவருபவர் சமந்தா. இவர் தற்போது, 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இவருடன் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சமந்தா நடிக்கும் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெண்களுக்கு முக்கியத்துவம்
இந்நிலையில் சமந்தாவின் புதிய படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் இப்படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.
ரசிகர்கள் மகிழ்ச்சி
இன்னும் பெயரிடாத இப்படத்தை அறிமுக இயக்குநர் சாந்தரூபன் இயக்குகிறார். மேலும் படத்தின் அடுத்தகட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து பெற்றபிறகு சமந்தா மீண்டும் படங்களின் கதை கேட்க ஆரம்பித்தது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'ஆர்டிக்கிள் 15' ரீமேக்: உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' மோஷன் போஸ்டர் வெளியீடு