சமந்தா - நாக சைதன்யா இருவரும் 2017ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமண வாழ்க்கையில் கிசுகிசுக்கப்புகள் ஏதுமின்றி வாழ்க்கை நடத்திவந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவருவதாக தகவல்கள் வெளியாகின. அதன்படியே செப்.2ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் கங்கனா ராணாவத், "இந்த அறிவிப்புக்கு பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என அறியப்படும் உச்ச நட்சத்திரம் ஒருவர்தான் காரணம். அவரை சந்தித்த பின்னரே நாக சைதன்யா இந்த முடிவை எடுத்துள்ளார்" எனப் பதிவிட்டுள்ளார். 'லால் சிங் சட்டா' படத்தில் ஆமீர்கானுடன் நாக சைதன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.