தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் உடற்பயிற்சியில் தனி கவனம் செலுத்தி வருவதோடு இல்லாமல், ஜிம்மில் எடுக்கப்படும் வீடியோ, புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார். அதை அவரது ரசிகர்கள் வைரலாக்குவது வழக்கம்.
சமந்தாவின் ஃபிட்னஸ் ரகசியம்! - ஃபிட்னஸ்
நடிகை சமந்தா ஜிம்மில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
samantha
இந்நிலையில், தற்போது ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை சமந்தா வெளியிட்டுள்ளார். அதில். உயரமான வளைவு கம்பியில் எவற்றின் உதவியும் இல்லாமல் வெறும் கைகளால் ஏறி பின் அதே போன்று கீழே இறங்குகிறார். இதுவரை இந்த வீடியோ பல லட்சம் கமெண்ட்ஸூம் லைக்குகளும் வாங்கியுள்ளது.