தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சினிமாவுக்கு முழுக்கு? சமந்தா விளக்கம் - சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் சமந்தா

சினிமாவிலிருந்து இடைவெளி எடுக்கலாம். ஆனால் ஓய்வு என்பது இல்லாமல் ஏதாவது ஒரு வகையில் உலா வந்துகொண்டுதான் இருப்பேன் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

samantha clarifies on quitting cinema
Actress Samantha

By

Published : Feb 11, 2020, 3:49 PM IST

Updated : Feb 11, 2020, 5:37 PM IST

சென்னை: சினிமாவுக்கு முழுக்கு போட நடிகை சமந்தா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் கலக்கிவரும் சமந்தா திரைத்துறைக்கு இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் முழுக்கு போட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பேட்டி ஒன்றில் அவர் இவர் தெரிவித்தாதகக் கூறப்பட்டது.

இதையடுத்து ஜானு படத்தின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பேசிய நடிகை சமந்தா இதுகுறித்து பேசுகையில், ”96 படத்தின் தெலுங்கு பதிப்பான ஜானு படத்தில் இயக்குநர் பிரேம் குமார் சிறிய மாற்றங்களை செய்திருந்தார். அது ரசிகர்களை பெரிதாக கவர்ந்துள்ளது.

நான் மூன்று ஆண்டுகளில் சினிமாவிலிருந்து விடைபெறுவேன் என்று ஒருபோதும் கூறவில்லை. எனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. சினிமாவில் 10 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். ஒரு நடிகை சினிமாவில் மிக நீண்ட காலம் தாக்குப்பிடிப்பது பெரிய விஷயம்.

சினிமா மட்டுமில்லாமல் ஏதோ ஒரு வகையில் நான் உலா வந்துகொண்டுதான் இருக்கிறேன். சினிமாத் துறையில் இவ்வளவு தூரம் வந்தது எப்படி என்பது எனக்கே தெரியவில்லை. சில விஷயங்களை திட்டமிட முடியாது. ஒருவேளை நாளையே சினிமாவிலிருந்து நான் சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஓய்வு எடுக்க முடியாது” என்றார்.

Last Updated : Feb 11, 2020, 5:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details