கரோனா வைரஸ் தற்போது 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில், இந்தத் தொற்று நோயால், இதுவரை 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, பொதுவெளியில் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்குமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்திவருகின்றன.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திரைத்துரை பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு, ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். மேலும் அனைத்து மொழி படங்களின் ஷூட்டிங்கும் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பிரபலங்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகின்றனர்.