நடிகர் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம், ‘மாஸ்டர்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் தான், கரோனா அலைக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியான மாஸ் ஹீரோ திரைப்படம்.
தெலுங்கு, இந்தி, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. ‘மாஸ்டர்’ திரைப்படம் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானாலும், பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று இதன் இந்தி ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளது.