இந்தியா அளவில் அனைத்து மொழிகளிலும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் 'கே.ஜி.எஃப்'. இந்தப் படம் இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கே.ஜி.எஃப்' இரண்டாம் பாகம் தற்போது வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது .இந்த பிரமாண்ட படத்தை ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இச்சூழலில், ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் பிரசாந்த் நீலுடன் தற்போது மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. பிரசாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு 'சலார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. 'சலார்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஷ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'சலார்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் ஷ்ருதி ஹாசன் கலந்துகொண்டுள்ளார்.
ஷ்ருதி ஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு இதுகுறித்து ஷ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பகிர்ந்துள்ளார். அதில், ”பிரம்மாண்ட இயக்குநர் பிரசாந்த் நீலை சிரிக்க வைத்த நான் ஒரு லெஜன்ட் என்று நினைக்கிறேன். சலார் படப்பிடிப்பில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக்கூறி பிரசாந்த் நீலுடன் தான் இருக்கும் கறுப்பு - வெள்ளை புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: மூன்று படங்கள்; 1,000 கோடி ரூபாய் பட்ஜெட் - வசூல் சாதனை படைப்பாரா பிரபாஸ்