இயக்குநர் செல்வராகவன் - நடிகர் சூர்யா முதன்முறையாக இணைந்திருக்கும் படம் 'என்ஜிகே'. இத்திரைப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் இத்திரைப்படத்துக்காக காத்திருக்கும் சூழலில் இதன் ட்ரெய்லர் மற்றும் இசை நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
எல்லாத்துக்கும் செல்வராகவன்தான் காரணம்: நடிகை சாய் பல்லவி - என்ஜிகே இசை வெளியீட்டு விழா
சென்னை: நான் வேறு சாய் பல்லவியாக நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இயக்குநர் செல்வராகவன்தான் என நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை சாய் பல்லவி, “என்ஜிகே படப்பிடிப்பு சென்றபோது முதலில் நான் பயந்தேன். ஏனெனில் எனக்கு அனுபவம் குறைவு. வீட்டிலிருந்து வசனங்களை கற்றுக்கொண்டு செல்வேன். ஆனால் நான் யோசிப்பதைவிட வேற லெவலில் இயக்குநர் செல்வராகவன் யோசிக்கிறார்.
இதனால், நான் நடிகை என்று என்னை நானே ஏமாத்திட்டு இருந்துருக்கேன் என என என் அம்மாவிடம் சொன்னேன். நான் வேறு சாய் பல்லவியாக நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இயக்குநர் செல்வராகவன்தான்” என்றார்.