அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 30 வயதுக்குள் டாப் 30 இந்தியர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நடிகை சாய் பல்லவி.
பல்வேறு துறைகளில் பிரபலமாகத் திகழும் 30 வயதுக்குள் இருக்கும் டாப் இந்தியர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டது.
இதையடுத்து இந்தப் பட்டியலில் பொழுதுபோக்கு துறையில் இடம்பிடித்த ஒரே நடிகை என்ற பெருமையை சாய் பல்லவி பெற்றிருக்கிறார்.
'கணக்கு வகுப்பிலிருந்து தப்பிக்க ஆறாம் வகுப்பு படிக்கும்போது தனது முதல் படத்தில் நடித்தவர் சாய்பல்லவி. தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பல மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர், தற்போது புதுமையான கேரக்டர்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்' என்று ஃபோர்ப்ஸில் சாய் பல்லவி பற்றி குறிப்பு கொடுத்துள்ளனர்.