'பிரேமம்' படத்தின் மூலம் இந்தியா முழுவவதும் பிரபலமானவர் சாய் பல்லவி. இப்படத்தில் மலர் டீச்சராக வந்து அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்தார். இதைத்தொடர்ந்து தெலுங்கில் இவர் நடித்த 'ஃபிடா' திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.நடனம், நடிப்பு, மருத்துவர் என பன்முகத்தன்மை கொண்டவர் சாய் பல்லவி.
மீண்டும் அரசியல் கதையில் சாய் பல்லவி! - ஒப்பந்தம்
'மாரி 2' படத்தில் 'ரவுடி பேபி'யாக நடனத்தில் மிரட்டிய சாய் பல்லவி, தெலுங்கு படம் ஒன்றில் பாகுபலி பட வில்லனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
தெலுங்கில் வெற்றிக்கொடி நாட்டிய சாய்பல்லவி தமிழில் 'தியா' படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம், ரசிகர்களின் வரவேற்பைப் பெறத் தவறியது. 2018ஆம் ஆண்டு வெளியான 'மாரி-2' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' பாடல் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. இதில் சாய் பல்லவியின் நடனம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. சமீபத்தில் வெளியான 'என்ஜிகே' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது.
இந்நிலையில், தெலுங்குப் படம் ஒன்றில் நடிகர் ராணாவுக்கு ஜோடியாக நடிக்க சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டார். 'விராடபர்வம்' என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அரசியலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஏழை விவசாயின் மகளாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படம் சாய்பல்லவியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் என திரை உலகினர் தெரிவிக்கின்றனர்.