தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தெலுங்கு நடிகர் உடல்நிலை எப்படி உள்ளது? - மருத்துவமனை நிர்வாகம் புதிய தகவல் - சாய் தரம் தேஜ் உடல்நிலை

சாலை விபத்தில் சிக்கி, சிகிச்சைப் பெற்றுவரும் சாய் தரம் தேஜ் உடல்நிலை எப்படி இருக்கிறது என மருத்துவமனை நிர்வாகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

சாய் தரம் தேஜ்
சாய் தரம் தேஜ்

By

Published : Sep 11, 2021, 10:41 AM IST

தெலுங்கு திரைத் துறையில் வளர்ந்துவரும் நடிகராக வலம்வருபவர் சாய் தரம் தேஜ். இவர் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் ஆவார். இவர் நேற்று (செப். 10) ஹைதராபாத்தில் உள்ள மாதப்பூரில் தனது ஸ்போர்ட் பைக்கில் அதிவேகமாகச் சென்றார்.

அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து, சுயநினைவை இழந்தார். உடனே அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஹைரெக் சிட்டியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

முன்னதாக அவரது உடலில் பல்வேறு பகுதிகளில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details