’பாகுபலி 2’ படத்துக்குப் பிறகு பிரபாஸ் எந்தப் படத்தில் நடிப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு இந்திய சினிமா ரசிகர்களிடம் இருந்தது. ‘ரன் ராஜா ரன்’ படத்தை இயக்கிய சுஜீத்தின் ஆக்சன் த்ரில்லர் கதையை பிரபாஸ் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகின. ‘சாஹோ’ என பெயரிடப்பட்டு பெரும் பொருட்செலவில் இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ஷ்ரதா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராப், நெய்ல் நிதின் முகேஷ், எவ்லின் ஷர்மா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றன. வம்சி கிருஷ்ணா, பிரமோத், பூஷன் குமார் ஆகியோர் தயாரிக்கும் இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 300 கோடி.
சுதந்திர தினத்தன்று பிரபாஸ் கொடுக்கும் டபுள் ட்ரீட்! - action thriller
பாகுபலி இரண்டு பாகங்களின் வெற்றிக்கு பிறகு சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய திரைப்படம் சுதந்திர தினத்தன்று திரைக்கு வரவுள்ளது.
Saaho
இந்திய சினிமா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘சாஹோ’ திரைப்படம் வரும் சுதந்திர தினத்தன்று திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் முதல் படக்குழுவினர் அனைவரும் இந்த செய்தியை மகிழ்ச்சியுடன் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.