தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 3, 2020, 2:07 PM IST

ETV Bharat / sitara

காதலியைக் கரம் பிடித்த 'சாஹோ' பட இயக்குநர்!

இயக்குநர் சுஜித் ரெட்டிக்கு நேற்று(ஆகஸ்ட் 2) எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

சுஜித் ரெட்டி
சுஜித் ரெட்டி

'ரன் ராஜா ரன்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், சுஜித் ரெட்டி. அதைத்தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'சாஹோ'. தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் சுஜித் ரெட்டி, தனது நீண்ட நாள் காதலியான பிரவள்ளிகாவை நேற்று(ஆகஸ்ட் 2) திருமணம் செய்து கொண்டார். ஊரடங்கு காரணமாக, இவர்களது திருமணம் எளிய முறையில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. திருமணத்தில் இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் இசையமைப்பாளர் ஜிப்ரான் இவர்களது திருமணத்திற்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details