தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

50 நாள்கள் இரவில் பிரமாண்ட சண்டைக்காட்சி - 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் புதிய அப்டேட் - ஆர்ஆர்ஆர் பிரம்மாண்ட சண்டைக்காட்சி

'ஆர்ஆர்ஆர்' படத்தின் பிரமாண்ட சண்டைக்காட்சிக்காக 50 நாள்கள் இரவில் நடைபெற்றுவந்த படப்பிடிப்பு நிறைவுற்றதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

RRR
RRR

By

Published : Nov 30, 2020, 4:16 PM IST

'பாகுபலி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'ரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர்ஆர்ஆர்). ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்டோர் நடித்துவரும் இப்படத்தை டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. சமீபத்தில் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்றுவந்தது.

இரவு பகலாக இந்தப் படத்தின் படப்பிடிப்பைப் படக்குழுவினர் நடத்திவருகின்றனர். தற்போது 50 நாள்கள் இரவில் நடைபெற்றுவந்த பிரமாண்ட சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டதாகப் படக்குழுவினர் அறிவித்து காணொலி ஒன்றை தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்தச் சண்டைக்காட்சிகளில் ராம்சரண் - ஜூனியர் என்டிஆர் இருவருமே கலந்துகொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தப் படப்பிடிப்பின்போது ஆலியா பட் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் எனத் தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details