ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அலியா பட், அஜய் தேவ்கன் என நட்சத்திரப் பட்டாளம் நடிப்பில் ராஜமெளலி இயக்கத்தில் பெரும் பொருள்செலவில் உருவாகிவரும் திரைப்படம் ஆர்ஆர்ஆர்.
இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலாக எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 9ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 7 ஆம் தேதி இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளும் துவங்கி விட்டது. ஏற்கனவே இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி பிரம்மிப்பை ஏற்படுத்தியது. இதன் ட்ரெய்லர் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அனால் திட்டமிட்டபடி ட்ரெய்லர் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ஜெயில்' ஓடிடி உரிமை விவகாரத்தில் முடிவெடுக்க நீதிமன்றம் தடை!