தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பேட்மேனாக அவதாரமெடுக்கும் ராபர்ட் பாட்டின்சன் - ராபார்ட் பேட்டின்சன்

2021ஆம் ஆண்டு திரைக்கு வரவிருக்கும் ’பேட்மேன்’ படத்தில் பேட்மேன் கதாபாத்திரமாக முன்னணி ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் நடிக்க இருக்கிறார்.

ராப்ர்ட் பேட்டின்சன்

By

Published : May 17, 2019, 10:50 AM IST

ஹாலிவுட்டை பொறுத்தவரை காமிக் வகை திரைப்படங்களுக்கு என்றைக்குமே மவுசு அதிகம். டி.சி, மார்வல் காமிக்ஸ் வரிசையில் தொடர்ச்சியாக சூப்பர் ஹீரோ திரைப்படங்களைத் தொடர்ச்சியாக எடுத்துக் குவிப்பதில் ஹாலிவுட்டுக்கு சலிப்பு தட்டியதே இல்லை. அதன்படி டி.சி காமிக்ஸில் வரும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான பேட்மேனை வைத்து தொடர்ச்சியாகப் பல படங்கள் வந்தவண்ணம் உள்ளன.

பேட்மேன் கதாபாத்திரம்

2000ஆம் ஆண்டுகளில் பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் மூன்று பாகங்களாக பேட்மேன் திரைப்படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. இதில் பேட்மேன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் கிரிஸ்டியன் பேல் நடித்திருந்தார். அதன்பின் வெளிவந்த பேட்மேன் மற்றும் சூப்பர்மேன் VS ஜஸ்டீஸ் லீக் போன்ற திரைப்படங்களில் நடிகர் பென் அப்லெக் பேட்மேனாக நடித்திருந்தார்.

இந்நிலையில் மற்றொரு பிரபல ஹாலிவுட் இயக்குநர் மாட் ரெவ்வீஸ் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு மீண்டும் 'தி பேட்மேன்' படம் வெளிவரவுள்ளது. இதில், பேட்மேனாக யார் நடிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருமளவில் எழுந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

ட்வைலைட் சாகா திரைப்பட புகழ் நடிகரான ராபர்ட் பாட்டின்சன் பேட்மேனாக நடிக்கவுள்ளதாக உறுதியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 32 வயதான பாட்டின்சன் மிக குறைந்த வயதில் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் என்ற பெருமை கொள்கிறார். 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details