தமிழில் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் ஆர்.கே. சுரேஷ். இந்த படத்திற்கு பின் அவர் 'மருது', 'பில்லா பாண்டி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
'காடுவெட்டி'யாக நடிக்கும் ஆர்.கே சுரேஷ்
நடிகர் ஆர்.கே. சுரேஷ் அடுத்ததாக 'காடுவெட்டி' என்னும் படத்தில் நடிக்கவுள்ளார்.
தற்போது இவர் நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பளாரகவும் இருந்துவருகிறார். ஆர்.கே. சுரேஷ் 'ஜோசப்' மலையாளம் படத்தின் ரீமேக்கான 'விசித்திரன்' என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து ஆர்.கே. சுரேஷ் சோலை ஆறுமுகம் எழுதி இயக்கும் 'காடுவெட்டி' என்னும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்தான அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் அறிவிக்கவுள்ளனர்.