தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சின்னத்திரை படப்பிடிப்பு எப்போது?

சென்னை: சின்னத்திரை படப்பிடிப்பை எப்போது தொடங்குவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் ஆர்.கே. செல்வமணி தலைமையில் நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்கே செல்வமணி
ஆர்கே செல்வமணி

By

Published : Jun 1, 2020, 3:25 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கிட்டத்தட்ட 50 நாள்களுக்கு மேலாக சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து சமீபத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை 20 நபா்களைக் கொண்டு நடத்த அரசு அனுமதி கொடுத்தது.

குறைந்த எண்ணிக்கையில் படப்பிடிப்பை நடத்த முடியாத சூழ்நிலையில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா் சம்மேளனமும், தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளா் சங்கத்தினரும் அமைச்சர் கடம்பூா் ராஜுவை சந்தித்து, 50 நபர்கள் இருந்தால் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் ஆகையால் அதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அக்கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு அதிகபட்சமாக 60 நடிகர், நடிகைகள், தொழில்நுட்பப் பணியாளா்களைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி வழங்கியது.

இந்நிலையில் இன்று மாலை சின்னத்திரை படப்பிடிப்பு எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் சுஜாதா மற்றும் மெகா தொடர்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் படப்பிடிப்பின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும். படப்பிடிப்பில் கலந்துகொள்பவர்கள் படப்பிடிப்பு தளத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் மற்றும் அரசு வலியுறுத்திய பாதுகாப்பு நடவடிக்கைகளை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details