தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

செல்ஃபிக்கு சலிக்காத 'தல'! - RJ Sulaba shares selfie taken along with Ajith

பிரபல ரேடியோ ஆர் ஜே சுலபாவுடன் நடிகர் அஜித் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது

ajith

By

Published : Oct 21, 2019, 11:31 PM IST

தல அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இந்த திரைப்படத்திற்காக தனது ட்ரேட்மார்க்கான 'சால்ட் அண்ட் பெப்பர்' லுக்கை மாற்றிக்கொண்டு கருமையான தலைமுடியுடன், கிளீன் ஷேவ் செய்து மிகவும் ஹேண்டசமாக மாறியுள்ளார் அஜித்.

சில நாட்களுக்கு முன் விமான நிலையத்தில் ரசிகர்களின் ஆசைக்கிணங்க அவர்கள் செல்ஃபிக்கு சலிக்காமல் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை ரசிகர்கள் 'கடவுளே' என அழைத்தவுடன் கோபப்பட்டு அங்கிருந்து சட்டென கிளம்பி விட்டார்.

ஆர் ஜே சுலபாவுடன் நடிகர் அஜித் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம்

சமீபத்தில் பிரபல ரேடியோ ஆர் ஜே சுலபாவுடன் நடிகர் அஜித் செல்ஃபி எடுத்துக்கொண்டது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து அஜித்தை பற்றி சுலபா பெருமையாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: 'பேபி நம்பர் 2, உனக்காக தயாராக இருக்கிறோம்'

ABOUT THE AUTHOR

...view details