தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கேரளா, குஜராத்தில் நடக்கவிருக்கும் ரியோ ராஜின் புதிய படத்தின் படப்பிடிப்பு!

சென்னை: பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னை மட்டுமின்றி கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rio raj - ramya nambeesan movie shooting

By

Published : Oct 18, 2019, 7:27 PM IST

பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து படப்பிடிப்பானது பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் உள்பட தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

படக்குழுவினர்

இதைத்தொடர்ந்து படத்தின் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் கூறுகையில், இதுபோன்ற மழைநாளில் படப்பிடிப்பு தொடங்கியதை இயற்கையின் ஆசிர்வாதம் என நினைப்பதாகக் கூறினார். மேலும் பல முனைகளிலிருந்தும் வரும் நேர்மறையான ஆதரவு, படத்தின் வெற்றிக்கு வழிவகுக்குமென தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்

கேரளா, குஜராத்தில் நடக்கும் படப்பிடிப்பு:

ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் முனீஷ்காந்த், ரோபோ சங்கர், பால சரவணன், விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், ரேகா, சந்தான பாரதி, லிவிங்ஸ்டன், எம்.எஸ். பாஸ்கர், பழைய ஜோக் தங்கதுரை ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சென்னை மட்டுமின்றி கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

விஜி சந்திரசேகர்


யுவனின் இசை

பொழுதுபோக்கு அம்சங்களைப் முதன்மைப்படுத்தி உருவாகும் இப்படத்தை பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார், எல். சிந்தன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாக அமைந்திருப்பது யுவன் சங்கர் ராஜாவின் இசை.

படத்தின் கதையை ஏ.சி. கருணாமூர்த்தி எழுத, வசனத்தை ஆர்.கே. எழுதுகிறார். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, சாம் ஆர்.டி. எக்ஸ் படத்தொகுப்பை கவனிக்கிறார். ஸ்டன்னர் சாம் சண்டைக் காட்சிகளை அமைக்க, கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார் சரவணன்.


இதையும் படிங்க: சட்டவிரோதமாகக் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் குறித்து பேசவருகிறது 'கல்தா'!

ABOUT THE AUTHOR

...view details