'தூங்காவனம்' படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா அடுத்து இயக்கிக்கொண்டிருக்கும் திரைப்படம் `கடாரம் கொண்டான்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் விக்ரம் மற்றும் கமலின் மகள் அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.
இந்தப் படத்தின் சிங்கிள் ட்ராக் வரும் மே 1ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்பாடலை நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த பாடலை நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ள நிலையில், அதுதற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், `கடாரம் கொண்டான்' விரைவில் வெளியாக உள்ள நிலையில் ஸ்ருதியின் இப்பாடலால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.