பவுலோ கோய்லோ எழுதிய ‘தி ஆல்கெமிஸ்ட்’ எனும் நாவலைத் தழுவி அதே பெயரில் உருவாகியுள்ளது The Alchemist. வில் ஸ்மித் மற்றும் ஜேடா பின்கெட் ஸ்மித் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.
பவுலோ கோய்லோ எழுதிய புகழ்பெற்ற நாவல் 'The Alchemist’. போர்ச்சுகீசிய மொழியில் எழுதப்பட்ட இந்நாவல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. தற்போது இந்நாவல் திரைப்பட வடிவம் பெற்றுள்ளது. அந்தாலூசியாவைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் இளைஞன், தனது கனவில் வரும் புதையலை அடைய எகிப்தில் உள்ள பிரமிடை நோக்கி பயணிப்பதுதான் இதன் கதை.
செபாஸ்டியன் டிசோசா, டாம் ஹோலண்டர், சோரா அக்தஸ்லு ஆகியோர் இதில் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். கான்ஸ் திரைப்பட விழாவில் கூட இப்படம் கலந்துகொண்டது. இந்நிலையில், இப்படம் நின்றுவிட்டதாக ஒரு வதந்தி பரவியது. ஆனால், படத்தின் உரிமையை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால்தான் படம் வெளியாக தாமதம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உரிமைச் சிக்கல் முடிந்து, இப்படம் விரைவில் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘தி ஆல்கெமிஸ்ட்’ நாவலை வாசித்தவர்கள் இப்படத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க:தர்பார் திருவிழா: ரஜினிஃபைட் ஜப்பான் ரசிகர்கள்!