‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் மிஸ்கின். அதன்பிறகு பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். 2010ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் உருவான ‘நந்தலாலா’ படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். அதன்பிறகு 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'சவரக்கத்தி', 'சூப்பர் டீலக்ஸ்' என மூன்று படங்களில் நடித்திருக்கிறார். இந்த மூன்று படங்களிலும் அவர் கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில் அவர் அடுத்ததாக நடித்துள்ள ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மிஸ்கினின் அடுத்த படம் வெளியாகும் தேதி? - சுசீந்திரன்
மிஸ்கின் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
’தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. இதில் மிஸ்கின், இயக்குநர் சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
க்ரைம் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிஸ்கின் இதில் காவல் துறை உயர் அலுவலர் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இதன் டிரைலர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.