நடிகரும் இயக்குனருமான பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் 'வேட்டிய மடிச்சு கட்டு' என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
சாந்தனுவின் சோகத்திற்கான காரணம்...! - பாக்யராஜ்
நடிகர் சாந்தனு தனது டிவிட்டர் பக்கத்தில் சோகமான பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
பின்னர் 'சக்கரக்கட்டி', 'ஆயிரம் விளக்கு', 'சிந்து பிளஸ் டூ', 'அம்மாவின் கைபேசி', 'கண்டேன்', 'கோடிட்ட இடங்களை நிரப்புக' போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். படங்கள் தொடர்ந்து பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், சினிமாத் துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில் அவரது டிவிட்டர் பக்கத்தில் சோகமான செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் "ஆயிரத்திற்கும் அதிகமானோர்க்கு கிரிக்கெட் பயிற்சி கொடுத்த தர்மலிங்கத்தின் மறைவு, கிரிக்கெட்டிற்கு பெரும் இழப்பு" என தெரிவித்துள்ளார்.